Prabhu's
CANDID CLICKS
என்னை பற்றி
ஐரோப்பாவில் நிகழும் ஒரு சில நிகழ்வுகளில் புகைப்படங்கள் மற்றும் ஒளிப்பதிவு செய்வதின் மூலம் அவர்களின் திருமணம் எனும் புதிய பயணத்தில் சினிமா தரம் கொண்ட காட்சிகளை உருவாக்கும் வாய்ப்பு கிடைப்பதால் நான் என்னை ஒரு அதிர்ஷ்டசாலியாக கருதுகிறேன்.
புகைப்படம் மற்றும் ஒளிப்பதிவு செய்வதென்பது எப்போதும் நான் ரசிக்கும் ஒன்று. இவற்றை எனது தொழிலென நினைத்து நான் செயற்பட்டது இல்லை. ஒவ்வொரு நிகழ்விலும் புதிதாக சில உத்திகளை பயன்படுத்துவது எனக்கு பிடித்தமான ஒன்று. அதுவே என் வளர்ச்சிக்கு வழிகாட்டியாகவும் உள்ளது.
ஆரம்பத்தில் மாடல் ஆக எனது வாழ்க்கையை தொடங்கியதால் கேமரா முன்னால் இயல்பாக மற்றும் புரிதல் அறிந்து நடப்பது கடினம் என்று என்னால் முழுமையாக புரிந்து கொள்ள முடிகிறது. இந்த அனுபவமே புகைப்படம் மற்றும் ஒளிப்பதிவு செய்யும்போது உங்களை மிக இலகுவாக இயக்குவதுக்கு எனக்கு உதவியாக அமைகிறது.
இத்துறையில் வெற்றிகரமான கலைஞனாக இருப்பதற்கு எனது படைப்புத்திறன் ஆர்வம் மட்டுமல்லாது மேலாக இறைவனின் கிருபையே என்று நான் நம்புகிறேன்.
உங்கள் அருமையான நிகழ்வுகளை மறக்க முடியாததாக மாற்றுவதில் உங்களுக்கு விருப்பம் இருந்தால், எனது பாணி உங்களுக்கு பொருத்தமாக இருக்கும் என்று நம்பினால், நீங்கள் என்னை தொடர்பு கொள்ளுங்கள்.
நாங்கள் ஒன்றிணைந்து உங்கள் நிகழ்வில் ஒரு மேஜிக் நிகழ்த்துவோம்!
"எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்"
கொலோசெயர் 3:24